வெறுப்பு ஒரு சிறை- தந்தையின் நினைவு நாளில் ராகுல் உருக்கம்

ராஜிவ் காந்தியின் 27-ம் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது 27-ம் நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாயும் ராஜிவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி, மகள் பிரியங்கா வதேரா ஆகியோர் இன்று காலை டெல்லியில் உள்ள ராஜிவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் தன் தந்தையின் நினைவு குறித்து இன்று காலை ராகுல் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “என் தந்தை எனக்கு நிறைய நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளார். அதில் முக்கியமானது அன்பு. வெறுப்பு என்பது ஒரு சிறை போல. நம்மை நாமே சிறையில் வைத்துக்கொள்வது போல. 

என் தந்தை எனக்கு எல்லோரையும் அன்புடன் மதிக்கக் கற்றுகொடுத்துள்ளார். ஒரு மகனுக்கு தந்தை கொடுக்க வேண்டிய பெரும் செல்வங்களுள் ஒன்றான அன்பு செலுத்துதல் குறித்து என் தந்தை எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>