காந்தி ஜெயந்திக்காக வெஜிடேரியன் டே கொண்டாடும் ரயில்வே!

மஹாத்மா காந்தியின் 150-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ரயிலில் சைவ உணவு மட்டுமே வழங்கும் முடிவை இந்தியன் ரயில்வே எடுத்துள்ளது.

இந்த 2018-ம் ஆண்டு மஹாத்மா காந்தியின் 150-வது ஜெயந்தி விழா அனுசரிக்கப்பட உள்ளது. இதையடுத்து அடுத்த மூன்றாண்டுகளுக்கு ரயிலில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனால் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்று ஆண்டுகளும் ஒவ்வொரு அக்டோபர் 2-ம் தேதியும் ரயில்வேயில் எல்லைக்குள்ளே அசைவம் இருக்கக் கூடாது என்றும் ரயில்வே பயணிகள் ஊழியர்கள் என அனைவரும் அந்த ஒரு நாளை சைவ நாளாகக் கடைபிடிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

மேலும் தண்டி யாத்திரையை நினைவு கூறும் வகையிலும் இனி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12-ம் தேதி சபர்மதியிலிருந்து நினைவு ரயில் விடவும் இன்னும் சில கொண்டாட்ட நிகழ்வுகளை மேற்கொள்ளவும் ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>