கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சல்: 15 பேர் பலி

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நிபா என்ற வைரஸ் மக்களை தாக்கி வருகிறது. இந்த வைரல் உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி பல எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.

நிபா என்ற வைரஸ், வவ்வால்கள் மூலம் பரவுவதாகவும், இது உயிர் கொல்லி என்றும் கூறப்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின், உடலில் உள்ள உறுப்புகளின் செயல்பாடுகள் ஒவ்வொன்றாக நின்று இறுதியில் மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவிற்கு கொடூரமான நோய் என்றும் கூறப்படுகிறது.

இந்த வைரஸ் கேரளாவில், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் அதிகமாக பரவி வருகிறது. நிபா தாக்குதலின் எதிரொலியாக கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிபா ஒரு தொற்று நோய் என்பதால், அதனை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>