இன்னமும் ரிசார்ட்டில் வாழும் எம்.எல்.ஏ-க்கள்! இது கர்நாடகா கூத்து!

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜக எம்.எல்.ஏ-க்கள் இதுவரையில் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்டில் இருந்து வெளிவரவில்லை.

கடந்த 12-ம் தேதி நடந்த கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 222 தொகுதிகளில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி வைத்தன. அதே நேரத்தில், `நாங்கள் தான் தனிப் பெரும் கட்சியாக விளங்குகிறோம். எனவே எங்களைத்தான் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்’ என்று பாஜக தரப்பு கூறியது.

இதையடுத்து தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற விதியுடன் மூன்று நாள் முதல்வரானார் எடியூரப்பா. நேற்று மாலை தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி விலகினார்.

இதையடுத்து மஜத-வின் குமாரசாமி முன்னர் அறிவித்தது போலவே காங்கிரஸ் உடனான கூட்டணியில் முதல்வராகப் பதவியேற்பது உறுதியானது. திங்கள்கிழமை பதவியேற்பு விழா தற்போது புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் மற்றும் மஜக-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் தங்கள் கடந்த மூன்று நாளாக வசித்து வரும் ரிசார்ட் மற்றும் ஹோட்டலிலேயே தங்கியுள்ளனர்.

தீவிர கண்காணிப்பில் பதவியேற்கும் வரையில் யாரையும் வெளியேவிடுவதாக இல்லை என இரண்டு கட்சி வட்டாரங்களும் ஒரு மனதாக முடிவெடுத்துள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பெங்களுரூவில் உள்ள ஹில்டன் எம்பஸி ஹோட்டலிலும் மஜக எம்.எல்.ஏ-க்கள் மெரிடியன் ஹோட்டலிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>