எடியூரப்பாவின் சர்ச்சைக்குரிய ஆடியோ: பொய் என மறுக்கும் பாஜக!
எடியூரப்பா காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை வளைத்துப்போடும் ஆடியோ லீக் விவாகரம் முற்றிலும் பொய்யானது என பாஜக எம்.எல்.ஏ ஒருவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள்களுக்கு முன்னாள் கர்நாடகா முதல்வராக இருந்த எடியூரப்பா தனது கட்சியின் ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியக் கட்டாயத்தில் இருந்தார். அந்த நேரத்தில் எடியூரப்பா காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரை வளைக்கப் பார்த்த ஆடியோ லீக் ஆகி பரபரப்பைக் கிளப்பியது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ பி.சி.பாட்டிலிடம் எடியூரப்பா பேசியுள்ளதாக இந்த ஆடியோ பதிவில் கூறப்படுகிறது. ஆடியோவில், `நீ என்னிடம் வா. என்னை வந்து சந்தித்துப் பேசு. உனக்கு நான் அமைச்சர் பதவி தருகிறேன். எங்களிடம் வந்துவிடு. வேறு யாராவது உன் கைவசம் இருந்தால் அவர்களையும் அழைத்து வா’ என்று எடியூரப்பா கூறுவதாக இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகாவில் வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏ ஹெப்பார், ‘எடியூரப்பாவுக்கு எதிரான ஆடியோ லீக் விவகாரம் முற்றிலும் பொய்யானது. அது ஆட்சியைக் களைக்கவும் பாஜக மீதான நற்பெயரைக் கெடுக்கவும் பொய்யாகத் தொடர்ப்பட்ட குற்றச்சாட்டு” எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com