களத்திலும் தகப்பனே..! மகள் ஜிவா உடன் தந்தை தோனியின் விளையாட்டு!

சிஎஸ்கே கேப்டன் தோனி தன் மகளுடன் களத்தில் விளையாடும் செல்ல விளையாட்டு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று பூனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைச் சந்தித்தது. பரபரப்பான ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி போட்டியில் வென்றது.

மேட்ச் முடிந்தவுடன் களத்திலேயே தன் மகள் ஜிவா உடன் ’தல’ தோனி செல்லமாக விளையாடத் தொடங்கிவிட்டார். இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

’கூல் கேப்டன் மட்டுமல்ல எங்க தல தோனி கூல் தந்தையும் கூட’ என தோனி மற்றும் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் ட்விட்டரில் பாசமழையைப் பொழிந்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>