புதிய கேப்டன்...புதிய அணி...அறிமுக வீரனாகக் களம் காணும் கோலி!

விராட் கோலி முதன்முறையாக இங்கிலாந்து தொடர் ஒன்றில் ஆங்கிலேய அணிக்காக விளையாட உள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல் எவ்வளவு பிரபலமோ அதுபோல், இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி தொடர் வெகு பிரபலம். அந்தக் கிரிக்கெட் தொடரில் கவுண்டி சர்ரே அணிக்காக ஜூன் மாதம் முழுவதும் விளையாடுவதற்காக விராட் கோலி ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே ஜூன் மாதத்தில்தான் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் கோலி கேப்டனாக விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்ரே அணியில் ரோரி பர்ன்ஸ் தலைமையிலான அணியில் விளையாட உள்ளார் கோலி. இங்கிலாந்து தொடரில் விளையாடும் ஆறாவது இந்திய வீரர் ஆவார் கோலி. முன்னதாக கடந்த 2004-ம் ஆண்டு சர்ரே அணிக்காக ஜாகிர் கான், 2005 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் ஹர்பஜன் சிங், 2006-ம் ஆண்டில் அனில் கும்ளே, பிர்க்யன் ஓஜா (2011), முரளி கார்த்திக் (2011) ஆகியோர் விளையாடியுள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>