சிங்கப்பூர் பாஸ்போர்ட் உடன் லண்டனில் தஞ்சம் புகுந்த நிரவ் மோடி!

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

குஜராத் வைர வியாபாரியான நீரவ்மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 600 கோடி அளவில் மோசடி செய்துவிட்டு, இந்தியாவை விட்டு தப்பியோடியவர். அவரது வீடு மற்றும் நிறுவனங்களில், சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புக்கள் அதிரடி சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்தன.

முன்னதாக வங்கி மோசடி தொடர்பாக ஜனவரி 31ஆம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்து, ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் விடுத்தது. ஆனால் நீரவ் மோடி, அவருடைய குடும்பத்தார் மற்றும் கூட்டாளிகள் நாட்டைவிட்டு ஜனவரி மாத துவக்கத்திலேயே வெளிநாட்டுக்குத் தப்பினர்.

இந்நிலையில் நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது நிரவ் மோடி சிங்கப்பூர் பாஸ்போர் உடன் லண்டனில் பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நிரவ் மோடியின் சகோதரர் நிஷால் மோடி பெல்ஜியன் பாஸ்போர்ட் உடன் அன்ட்வேர்ப் நகரில் பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>