எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராக கெடு: நீதிபதி உத்தரவு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பேஸ்புக்கில் இழிவான பதிவை பகிர்ந்த வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் கரூர் நீதிமன்றத்தில் வரும் ஜூலை மாதம் 5ம் தேதி ஆஜராக வேண்டும் என்று கெடு விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆளநர் பன்வாரிலால் புரோகித் பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தட்டிய சம்பவம் தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்தனர். தொடர்ந்து, எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரையில் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை.

இதற்கிடையே, இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் எஸ்.வி.சேகருக்கு எதிராக கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா, “வரும் ஜூலை மாதம் 5ம் தேதி எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>