தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய அந்த முதலிடம்: ஆய்வில் தகவல்
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் ஊழல் நடைபெறுகிறது என்றும், இதனால் இந்த பட்டியலில தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது என்றும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிஎம்எஸ் இந்தியா என்ற தனியார் நிறுவனம் ஒன்று ஊழல் ஆய்வு 2018 என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது. இதில், நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களை தேர்வு செய்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. குறிப்பாக, அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதில் ஏற்படும் சிக்கல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் ஊழலில் அதிகம் சிக்கியுள்ள மாநிலங்கள் குறித்து அந்நிறுவனம் ஆய்வு அறிக்கை ஓன்றை வெளியிட்டது.
இதில், அரசு சேவைகளை பொது மக்கள் பெறுவதற்கு தமிழ்நாட்டில் தான் அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுகிறது என்று அந்த ஆய்வின் முடிவில் கூறப்படுகிறது. இதனால், இந்த ஊழல் பட்டியலில் தமிழ்நாடு தான் முதல் இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் தெலங்கானா, 4வது இடத்தில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஊழல் தடுப்பு மோசமாக இருப்பதாகவும், கர்நாடகா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஊழல் தடுப்பு நடடிக்கை ஓரளவுக்கு பரவாயில்லை என்றும் அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com