மனைவியின் பெயரை பிழையாக டைப் செய்த ட்ரம்ப்!

தன் மனைவியின் பெயரை எழுத்துப் பிழையுடன் ட்வீட் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மனைவி, வீட்டுக்குத் திரும்பியது குறித்த செய்தியில் இப்பிழையை அவர் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியா ட்ரம்ப், கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகம் சம்மந்தப்பட்ட ஒரு சிகிச்சைக்காக அவர் ஒரு வார காலம் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சிகிச்சை முடிந்து அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

"முதல் பெண்மணி வெள்ளை மாளிகைக்குத் திரும்பியுள்ளார். மெலனியா உண்மையில் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி" என்று அதிபர் ட்ரம்ப் ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். இதில் 'Melania' என்பதற்குப் பதிலாக அவர் 'Melanie' என்று டைப் செய்திருந்தார். இப்பிழை மிகவிரைவிலேயே திருத்தப்பட்டு விட்டாலும், அதற்குள் அநேகர் கவனித்து விட்டனர்.

"முதல் பெண்மணி வெள்ளை மாளிகைக்கு இன்று காலை திரும்பி விட்டார். அவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். நன்றாக இருக்கிறார். அவர் உடல்நலம் பெற வேண்டும் என்று அநேகர் தொலைபேசி மூலமும் மின்னஞ்சல் மூலமும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அனைவருக்கும் நன்றி," என்று  சனிக்கிழமை வெளியிடப்பட்ட வெள்ளை மாளிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>