செல்பியால் வந்த வினை:இந்திய மாணவன் கடலில் விழுந்து இறந்த பரிதாபம்

ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து வரும் இந்திய மாணவர் செல்பி எடுக்க முயன்றபோது கடலில் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவை சேர்ந்த மாணவர் அங்கித் (20). ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் தங்கி படித்து வந்தார். இவர், தனது நண்பர்களுடன் அல்பானி நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க துறைமுகத்திற்கு சென்றார்.

அங்கு, ஆபத்தான மலைப்பகுதிக்கு சென்ற அங்கித், பாறை மீது நின்று நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். அப்போது, போட்டோ எடுக்கும் ஆர்வத்தில் பாறையின் நுனிக்கு சென்ற அங்கித் செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதில், அங்கித் கால் தவறி யாரும் எதிர்பாராத நேரத்தில் 40 மீட்டர் உயரத்தில் இருந்து கடலில் விழுந்து, உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மீட்பு ஹெலிகாப்டர் மற்றும் வீரர்களுடன் விரைந்தனர்.

இந்நிலையில், ஒரு மணி நேரம் தேடுதலுக்கு பிறகு அங்கித்தின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>