மாடியிலிருந்து தவறிவிழும் சிறுமி- காப்பாற்றி உலக நாயகனான வியாபாரி!

சீனாவில் கட்டட மாடியிலிருந்து தடுக்கி விழுந்த சிறுமியைக் காப்பாற்றி, `ஹீரோ’-வாகியுள்ளார் இளம் வியாபாரி ஒருவர். சிறுமியை அந்த நபர் காப்பாற்றிய திக் திக் நிமிடங்களின் வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

சீனாவில் ஒரு சந்தை வீதியில் உள்ள கடையில் வியாபாரி ஒருவர் தொலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது, தன் கடையின் அருகில் ஏதோ நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறார் அந்தச் சீன வியாபாரி. உடனடியாக, சிறுமி இருக்கும் இடத்தை நோக்கி விரைகிறார் அந்த வியாபாரி. இவை அனைத்தும் அந்த வியாபாரியின் கடையில் உள்ள ஒரு சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. 

அடுத்த சில நொடிகளில் அந்தக் கடையின் அருகிலுள்ள ஒரு கட்டடத்தின் மாடியிலிருந்து சிறுமி ஒருவர் விழும் நிலையில் இருந்துள்ளார். மாடியின் கீழே சரியாகக் காத்திருந்து அக்குழந்தை தவறிவிழும் நேரம் சரியாகக் காப்பாற்றியுள்ளார் அந்த வியாபாரி.

அருகிலுள்ள கடைகளிலிருந்து பெறப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவ இன்று அந்த சீன வியாபாரி சர்வதேச ஹீரோவாக மாறியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>