கலவர சூழலை கட்டுப்படுத்த முடியாமல் 2000 போலீசார் கூடுதலாக குவிப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று காலை தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதில், போராட்டக்காளர்கள் பேரணியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு முற்றுகையிட சென்றனர். ஆனால், போலீசார் இதற்கு தடை விதித்துள்ளனர்.

ஆனாலும், போராட்டக்காரர்கள் தடையை மீறி உள்ளே சென்றதை அடுத்து, போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு பதிலடியாக போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கண்ணாடிகள் நொறுங்கியது. இதைதவிர, அங்கு நின்றுக் கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை தீயிட்டு எரித்தனர்.

இதனால், போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும், கூட்டத்தை களைப்பதற்காக கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதனால், தூத்துக்குடி மாவட்டம் போர்க்களமாக மாறியது. கலவரம் அடுத்தடுத்து கட்டத்திற்கு சென்றதால் சூழலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இதனால், கன்னியாகுமரி, சேலம், மதுரை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூடுதலாக சுமார் 2000 போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>