இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

இந்தியா நேற்று தனது சூப்பர்சானிக் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இந்த ஏவுகணைச் சோதனையின் மூலம், ராக்கெட்டின் வாழ்க்கை காலத்தை 10 முதல் 15 ஆண்டுகள் வரை அதிகரிக்கும் முற்சி எடுக்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் இருக்கும் சந்திப்பூர் கடல் பகுதியில் உள்ள மொபைல் லான்சர் மூலம் தான் இந்த ஏவுகணைச் சோதனை நடந்துள்ளது.

இது குறித்து ராணுவத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், `பிரமோஸ் ஏவுகணையின் வாழ்க்கை காலத்தை அதிகப்படுத்தும் நோக்கில், கடந்த 21- 5- 2018 ஆம் தேதியன்று முதல் முறையாக இந்தியாவில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இந்தச் சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த பிரமோஸ் குழுவுக்கும், டி.ஆர்.டி.ஓ அமைப்புக்கும் ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது

இந்திய ராணுவத்தில் தரைவழி தாக்கும் பிரமோஸ் ஏவுகணை, ஃபைர் அண்டு ஃபர்கெட் வகை பிரமோஸ் ஏவுகணை, ஒரு குறிப்பிட்ட உயரத்தில் பறந்து தரையில் இருக்கும் எதிரி தளவாடங்களையும் டார்கெட்டுகளையும் அழிக்கவல்ல ஏவுகணை எனப் பல வகைகள் உள்ளன.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>