மூன்று மாதத்தில் 7ஆயிரம் கோடி நஷ்டம்! வருத்தத்தில் எஸ்.பி.ஐ!

வாராக்கடன் பிரச்னையால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பல நஷ்டத்தை சந்தித்துள்ளன.

நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கைப் பிறகு, ' புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15,44,000 கோடி ரூபாய். இதில் 15,28,000 கோடி ரூபாய் திரும்ப வந்துள்ளது’ என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. ஆனால், அன்றிலிருந்து இன்று வரை இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அரசும் மக்களும் பயனடையவே இல்லை என்பதே தற்போதைய குற்றச்சாட்டாக எழுந்துள்ளது. 

இன்றைய சூழலில் பெருநிறுவனங்களுக்குத்தான் அதிகபட்சக் கடன் பொதுத்துறை வங்கிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. ’88% செயல்படா சொத்துகள் தேங்கியிருப்பதற்குக் காரணம் பெருநிறுவனங்கள்’ என ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை அறிக்கை, ஜூன் 2017 கூறுகிறது. நடைமுறையில் நாட்டின் மிக முக்கியமான 12 நிறுவனங்களிடமிருந்து வரவேண்டிய வாராக்கடன் சுமார் 2,53,000 கோடி ரூபாய்.

மேலும் நகைக்கடை வியாபாரிகளான லலித் மோடி உள்ளிட்ட கூட்டம் மோசடியின் செய்த பணம் லட்சம் கோடிகளை எல்லாம் தாண்டிதான் உள்ளது. இதனாலே நாட்டின் தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் வீழ்ந்து வருகின்றன.

கடந்த 2017-ம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் நஷ்டம், 2,416 கோடி. ஆனால், 2018 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான நஷ்டம் 7,718 கோடி ரூபாய் ஆகியுள்ளது என ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவே அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>