டாஸ் போட்டு விளையாடினால் என்ன தப்பு?- கேள்வி எழுப்பும் கங்குலி!
சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பான ஐசிசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களை மெருகேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பல கட்ட முயற்சிகளுக்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் காயின் டாஸ் செய்துதான் இனிமேலும் விளையாட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக உலகளாவிய கிரிக்கெட் சங்கங்களுடன் இணைந்து காயின் டாஸ் திட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட ஐசிசி முடிவு செய்துள்ளது. வருகிற மே 27 மற்றும் 28-ம் தேதிகளில் மும்பையில் கிரிக்கெட் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மாநாடு நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தின் தான் காசு சுண்டிவிட்டு டாஸ் போட்டுப்பார்க்கும் முறையை இனிமேலும் டெஸ்ட் தொடர்களில் நடைமுறையில் வைத்திருக்கலாமா இல்லையா என்பது குறித்தான முடிவு எடுக்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கூறுகையில், “ஐந்து நாள் தொடரை மெருகேற்ற 140 ஆண்டு கால வழக்கத்தை மாற்ற நினைப்பது சரியல்ல. என்னைப் பொறுத்தவரையில் டாஸ் போட்டு விளையாடும் முறையை ஒழிக்கக் கூடாது.
போட்டித் தொடரை நடத்தும் நாடு டாஸ் போட்டு வெற்றி பெறவில்லை என்றால் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், ஜெயித்தால் பிரச்னை எனக் கூறுவது எந்த வகையில் சரி” என ஐசிசி-யிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com