ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் தான் சடலங்களை வாங்குவோம்: மருத்துவமனையில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம்
ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் தான் உடல்களை வாங்குவோம் என தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பொது மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பலியான 10 பேரின் உடல்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு திரண்டனர்.
இவர்கள், திடீரென ஸ்டெர்லைட் ஆலையை மூடிவதாக தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக அறிவித்தால் தான் இறந்தவர்களின் சடலங்களை வாங்குவோம் என்றும், துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, அப்பகுதியில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com