ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்குத் தடை: நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை அமைந்திருக்கும் இடத்தின் அருகிலேயே இரண்டாவது யூனிட் ஆலை அமைக்க ஸ்டெர்லைட் அனுமதி வாங்கியிருந்தது. ஆனால், அனுமதி பெறப்பட்ட இடத்தை விடுத்து வேறு இடத்தில் ஆலையில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.

இதையடுத்து பேராசிரியை பாத்திமா என்பவர் தொடுத்த வழக்கின் விசாரணையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் நடத்தியது. நீதிபதிகள் சுந்தர் மற்றும் அனிதா ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்றக் கிளை அமர்வு, ஸ்டெர்லைட் ஆலை விரிவாகத்துக்கு தடை விதித்துள்ளது.

மேலும் பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>