95வது பிறந்தநாள் கொண்டாடும் கருணாநிதி: தொண்டர்கள் அணி திரள ஸ்டாலின் அழைப்பு

ஜூன் 3 துவங்கி மாதம் முழுவதும் தமிழ்நாடு எங்கும் தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழாவை எழுச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம் என்று தி.மு.க தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.    இது குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்:    திராவிட இயக்கத்தின் வயது 100. தலைவர் கருணாநிதியின் வயது 95 பொதுவாழ்க்கையில் அவர்க்கு வயது 81, திரையுலக வாழக்கையில் அவருக்கு வயது 71 கட்சியின் தலைமை பொறுப்பில் அவருக்கு வயது 50. இத்தனை ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு அரசியல் சக்கரம் அவரை ஒரு அச்சாணியாக கொண்டு சுழல்கிறது. தலைவரின் அசைவுகள் சற்று குறைந்து இருந்தாலும் இந்த அரை நூற்றாண்டு அரசியல்  வரலாற்றில் இந்தியாவில் தலைவர் கலைஞருக்கு இணையாக அருமை பெருமைகளை கொண்டவர் யாரும் இல்லை.  மாநிலத்திலும் மத்தியிலும், எப்போதெல்லாம் அரசியல் நெருக்கடிகள் வருகிறதோ தலைவர் கருணாநிதி வகுத்தளிக்கும் வியூகமும், தீர்வுகளுமே தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் வரலாறாக பதிவாகும். இந்தியாவிற்கே பல முன்னோடியான திட்டங்களை கொண்டு வந்தவர் நமது தலைவர் கருணாநிதி.   அதிக காலம் ஆட்சி செய்தவர், அதிகமான திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தந்து இந்தியாவிற்கெய் வழிகாட்டியாய் திகழ்ந்தவர் . அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 1ம் தேதி திருவாரூர் அண்ணா திடலில் நடைபெற உள்ள பிறந்தநாள் விழா பொது கூட்டத்தில் அவரின் நீண்ட நாள் அரசியல் பயணத்தில் தோளோடு தோளாக நின்று துணை புரிந்து வரும் கட்சியின் பொதுசெயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெறவுள்ளது. பொதுக்கூட்டத்தில் நானும் அவரின் மைந்தன் என்ற பெருமை கொண்டும் அரசியலில் அவரின் இயக்க உடன்பிறப்பு என்ற தகுதியுடனும் பங்கேற்கவுள்ளேன். தமிழ்நாடும், இந்தியாவும், எதிர்பார்க்கும் மூத்த தலைவரான நமது தலைவர் கலைஞர் உடல் நலக்குறைவால் ஓய்வில் இருந்தாலும், அவரின் சிந்தனைகள் எல்லாம் சிறப்பாக உள்ளது என்றும் அவரின் வழிகாட்டுதலின் பேரில் களம் காண காத்துக்கொண்டிருக்கும் 1 கோடிக்கும் மேலான தொண்டர்கள் அனைவரும் அணி திரள்வோம். வீடெங்கும் தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவோம், அவரின் சாதனைகளை எட்டுத்திக்கும் கொண்டுசென்று அனைவரின் நெஞ்சத்திலும் பதியசெய்வோம். அவர் நல்ல உடல் நலத்துடன் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாட இது ஒரு முன்னோட்டமாக அமையட்டும். என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
More News >>