1000 லிட்டர் தண்ணீர் ரூ.18.40 என நிர்ணயம்: குடிநீர் வாரியம் அறிவிப்புnbsp

நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் குடிநீர் தேவை என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. குடிப்பதற்கு மட்டுமில்லாமல், அன்றாட தேவைகளுக்கும் தண்ணீர் அவசியம். குடிநீர் மட்டுமில்லாமல் பிற தேவைகளான தோட்டம், கழிவறை பயன்பாட்டிற்கும், தொழிற்சாலை உபயோகத்திற்கும் நீர் என்பது அவசியமான ஒன்று. இப்படி குடிநீர் தவிர்த்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீர் தேவைக்கு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டிற்கு நாம் அன்றாடம் உபயோகிக்கும் தண்ணீர் தேவைக்கு இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை தட்டுப்பாடின்றி வழங்க குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அப்படி இரண்டாம் நிலைசுத்திகரிக்கப்பட்ட  தண்ணீரை பெற விரும்புவோர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அணுகலாம். பெருங்குடி, கோயம்பேடு, கொடுங்கையூர், நெசப்பாக்கம் உள்ளிட்ட சுத்திகரிப்பு நிலையங்களில் 1000 லிட்டர் தண்ணீர்க்கு ரூ.18.40 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.  இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எப்படி தயாரிக்க படுகிறது போன்ற மேல் தகவலுக்கு செயற்பொறியாளர்- 8144 930 800 (கொடுங்கையூர், கோயம்பேடு) மற்றும் செயற்பொறியாளர் - 8144 930 600 (நெசப்பாக்கம், பெருங்குடி) ஆகிய சுத்திகரிப்பு நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளள்து. மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
More News >>