ஆளுநரைச் சந்திக்கிறாராம் முதல்வர்! நம்பிக்கையுடன் ஐபிஎல் பார்ப்போம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆளுநரைச் சந்திக்கிறாராம் முதல்வர், சாமி...எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்கள்.

’தூத்துக்குடியில் அப்பாவி மக்களை தனியார் நிறுவனத்துக்காக சுட்டுக்கொலை செய்த அரசாங்கம்’ என மக்கள் வீண் வதந்திகளைப் பரப்புவதைத் தடுக்க தமிழக உள்துறை அமைச்சகம் இணைய சேவையை முடக்குவதாக தற்போது அறிவித்தது.

இதையடுத்து, அந்த ‘வெறும் துப்பாக்கிச்சூடு சம்பவம்’ குறித்து ஆலோசிக்க மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாசற்ற மகோன்னதம் நிறைந்த தமிழகத்தின் உயரிய தலைவர், சிறந்த நிர்வாகி ஆளுநர் பன்வாரிலை சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

துப்பாக்கிச்சூடு நடந்ததுகூட தெரியாமல் இருக்கும் முதல்வர், தூத்துக்குடியில் போராட்டமா என அப்பாவியாய்க் கேட்கும் ஆளுநர், தமிழகம் என்றொரு மாநிலமா...முதலில் இந்தியா என ஒரு நாடு இருக்கிறதா என்ற கேள்வியுடன் உலகம் சுற்றித் திரியும் பிரதமர். இவர்களெல்லாம் சேர்ந்து அமைத்த விசாரணைக் கமிஷன்!

இதன் மூலமாகத்தான் பலியானவர்களுக்கு நீதியும், தூத்துக்குடி மக்களுக்கு நல்ல வாழ்வாதரமும் தமிழக மக்களுக்கு விடிவு காலமும் பிறக்கும் என நம்பிக்கையுடனே ஐபிஎல் பார்ப்போமாக!

More News >>