பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு - அமெரிக்காவில் 57 மடங்கு அதிகம்

முன்னேறிய நாடுகளில் பள்ளிகளில் நடக்கும் துப்பாக்கிச் சூடு பற்றிய ஆய்வில், அமெரிக்கா  57 மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

செய்தி நிறுவனம் ஒன்று, துப்பாக்கி வன்முறை குறித்த ஆவணங்கள், சர்வதேச ஊடக செய்திகள், அறிக்கைகள் அடிப்படையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. மழலையர் பள்ளி முதல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் வரையிலான கல்வி நிறுவனங்களில் நடந்த சம்பவங்கள் இதில் ஆய்வு செய்யப்பட்டன. பொருளாதாரத்தில் முன்னேறிய ஜி7 நாடுகளான கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவற்றை உள்ளடக்கி இந்த ஆய்வு செய்யப்பட்டது.

2009 ஜனவரி 1 முதல் 2018 மே 21 வரையுள்ள காலகட்டத்தில் பள்ளி மைதானத்தில் நடந்த நிகழ்வுகள், கும்பல் வன்முறை, கலவரங்கள் ஆகியவற்றில் குறைந்தது, தாக்குதல் நடத்தியவரை தவிர ஓர் உயிர் பலியாகியிருந்தாலும் கருத்தில் கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவின்படி, அமெரிக்க பள்ளிகளில் 2009 ஜனவரி 1 முதல் 288 முறை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஏனைய ஜி7 நாடுகளுடன் ஒப்பிடும்போது இது 57 மடங்கு அதிகமாகும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>