லிட்டருக்கு ரூ.80ஐ தாண்டிய பெட்ரோல் விலை: அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்றும் காணாத அளவிற்கு உச்சத்தை தொட்டு வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள முக்கிய பெரு நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி முதல் கடந்த 13ம் தேதி வரை 19 நாட்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. கர்நாடகா தேர்தல் முடிந்த பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் ஏறுமுகத்துடனே காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பெட்ரோல் ரூ.79.79க்கும், டீசல் விலை ரூ.71.87க்கும் விற்பனையானது. இதன்மூலம், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதும் பெட்ரோல், டீசல் உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், வரலாறு காணாத வகையில், நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து ரூ.80.11க்கும், டீசல் விலை 27 காசுகள் உயர்ந்து ரூ.72.14க்கும் விற்பனையானது.பெட்ரோல், டீசல் விலையின் உயர்வை கண்டு, வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>