துப்பாக்கிச்சூடு கண்டித்து தமிழகத்தில் நாளை பந்த்: திமுக அறிவிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன்தினம் பெரியளவில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட திரண்ட மக்களை போலீசார தடியடி நடத்தினர். அப்போது, இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து, தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் நேற்றும் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மீண்டும் பதற்ற நிலை உருவானது.

மேலும், இதுதொடர்பாக வதந்திகள் பரவாமல் இருக்க தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகத்தில் நாளை (மே 25ம் தேதி) முழு அடைப்பு போராட்டம் நடத்த திமுக அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து திமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் மே 25ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தை வணிகர்களும், இளைஞர்களும் ஜனநாயக வழியில் நடத்திட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>