கல்யாண வயசு தான் வந்துடுச்சு டி..4 நாட்களில் 5.5 மில்லியன் வியூவர்ஸ்

நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் கோலமாவு கோகிலா. நடிகைக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தப் படத்தா நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள இதுவரையோ என்ற பாடல் வீடியோ முதலில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் இரண்டாவதாக கல்யாண வயசு என்ற பாடலை வெளியிட்டனர். இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

கல்யாண வயசு தான் வந்துடுச்சு டி.. பாடல் வீடியோவை, வெளிவந்து நான்கு நாட்களில் 5.5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். நயன்தாராவிடம் யோகி பாபு தனது காதலை சொல்லும் காட்சிகள் அமைந்துள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>