தமிழக மைதானங்களுக்குப் பாதுகாப்பு: மக்கள் போராட்டம் நடத்துவார்களாம்!
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மைதானங்களுக்கும் மக்கள் கூடும் இடங்களிலும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் கடந்த நூறு நாள்களுக்கு மேலாக விடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு நாள்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் போராடும் மக்களை ஒடுக்க தமிழகக் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதில் 10 பேர் பலியாகினார். பலர் காயமடைந்தனர். போராட்டத்தைக் கலவரமாக அறிவித்த அரசு தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு விதித்தது. இதன் பின்னரும் மக்கள் போராட்டம் ஓயவில்லை.
தொடர்ந்து தூத்துக்குடியிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், மீண்டும் நேற்று தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடில் போலீஸ் ஈடுபட்டது. இதில் இரண்டு பேர் பலியாகினர்.
இந்நிலையில், மக்கள் மத்தியில் தேவையில்லாத வதந்திகள் பரவுவதால்தான் குழப்பம் நிலவுவதாக தமிழக உள்துறை அமைச்சகம் இணைய முடக்கத்தை அறிவித்தது. அத்தனை சர்வாதிகார செயலையும் மேற்கொண்டு வரும் தமிழக அரசு இன்று தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் போராட்டம் நடக்கும் என அச்சம் கொண்டதாம்.
அதனால், மைதானங்கள், கடற்கரைகள், மக்கள் கூடும் முக்கிய சந்திப்புகள் என வெறும் நிலத்துக்கு தமிழகக் காவல்துறை பாதுகாப்பு அளித்து வருகிறது. இதனால் மக்கள் போராட்டங்களைத் தவிர்க்கப் பொகிறார்களாம்!
தற்போது சென்னை மெரினா, கடலூர் மஞ்சக்குப்பம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல நகரங்களிலும் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com