ஸ்டெர்லைட்டில் உற்பத்தியை நிறுத்த உத்தரவு!
ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியை நிறுத்துமாறு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லை ஆலையில் உற்பத்தி நடத்துவதற்கான உரிமை கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் உரிமையை புதுபிப்பதற்கான விண்ணப்பத்தை தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் சமர்ப்பித்தது.
ஆனால், உரிமை மறுக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 5.15 மணியிலிருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார வசதி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் ஸ்டெர்லைட் ஆலையில் நடந்த மாசுக்கட்டுப்பாடு ஆணையத்தின் ஆய்வில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் ஆலைக்குள் மின் உற்பத்தி நடப்பது கண்டறியப்பட்டதால் இத்தகைய உத்தரவை தமிழக மாசுக்கட்டுப்பாடு ஆணையம் விதித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடுவதற்கான மக்கள் போராட்டம் வலுவடைந்து வந்த நிலையில் அதை மண்ணோடு மண்ணாகப் புதைத்த தமிழக அரசைச் சார்ந்த ஒரு ஆணையம் தான் தற்போது தடை விதித்துள்ளது.
உரிமை மறுக்கப்பட்டும் கடந்த இரண்டு மாதங்களாக சட்டத்துக்குப் புறம்பாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்துள்ளது. அப்போதெல்லாம் விதிக்காத தடை துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பின்னர் மட்டும் விதிக்கப்பட்டிருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com