குவியும் பொதுநல வழக்குகள்! கொலைகாரனிடமே விசாரணையை நடத்தச் சொல்வதா?

சென்னை உயர் நீதிமன்றம், இதனின் மதுரைக் கிளை, டெல்லி உச்ச நீதிமன்றம் என அத்தனை நீதிமன்றங்களிலும் பொதுநல வழக்குகள் தூத்துக்குடியி தமிழக அரசும் காவல்துறையும் நிகழ்த்திய அராஜகங்களுக்கு எதிராகக் குவிந்து வருகின்றன.

12 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்த சீருடையில் இல்லாத காக்கிச்சட்டைக் கூட்டம், தங்கள் காவல்துறை நண்பர்களை மக்கள் தாக்கியதால் அவர்களைத் திருப்பி பாதுகாப்புக்காகத் தாக்கினார்களாம்.

அமைதி வழியில் போராடும் மக்கள் ஒரு கொந்தளிப்பில் வன்முறையிலேயே ஈடுபட்டிருந்தாலும் சீருடை அணியாமல் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கான விதிமுறைகளையும் பின்பற்றாமல் நாட்டின் மிகச்சிறந்த காவல்துறை எனப் பெயர் வாங்கிய தமிழகக் காவல்துறை மனிதத்தை, கடமையை, சட்டத்தை அனைத்தையும் சுட்டு வீழ்த்தியுள்ளது.

இதுபோதாதென மக்கள் வன்முறை செயல்களில் ஈடுபடாமல் தடுக்க இணைய வசதியை வேறு முடக்கியுள்ளது. இதை அனைத்தையும் கண்டித்து வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் சிலர், பொதுமக்களுள் சிலர் என தொடர்ந்து சென்னை, டெல்லி நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அதிலும் பல வழக்குகள், “படுகொலை செய்தவர்களே விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரிக்கச் சொல்வது நியாயமல்ல” என வழக்குப் அதிவு செய்துள்ளனர். ஒரு குற்றச்சாட்டை விசாரிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பலர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>