நாட்டு மக்களைக் கொன்றுவிட்டு பிட்னஸ் வீடியோ போடுகிறாராம் மோடி!

நாட்டின் தென்கோடியில் மக்கள் உயிர் இழந்து, வீடு இழந்து தவித்து வரும் வேளையில் விரைவில், ‘என் பிட்னஸ் வீடியோ வெளியிடுகிறேன்’ எனக் கூறியுள்ளார் பிரதமர் மோடி.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் கடந்த நூறு நாள்களுக்கு மேலாக விடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு நாள்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் போராடும் மக்களை ஒடுக்க தமிழகக் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதில் 10 பேர் பலியாகினார். பலர் காயமடைந்தனர். போராட்டத்தைக் கலவரமாக அறிவித்த அரசு தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு விதித்தது. இதன் பின்னரும் மக்கள் போராட்டம் ஓயவில்லை.

தொடர்ந்து தூத்துக்குடியிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், மீண்டும் நேற்று தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடில் போலீஸ் ஈடுபட்டது. இதில் இரண்டு பேர் பலியாகினர்.

தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள ‘மனிதம்’ நிறைந்த மனிதர்கள் யாவரும் வருந்தி வேதனையில் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலியின் ட்விட்டர் பிட்னஸ் சேலஞ்சு பதிவை ஏற்று, “உங்கள் சவாலை ஏற்கிறேன் விராட். விறைவில் எனது உடற்பயிற்சி வீடியோவை ட்விட்டரில் பதிவேற்றுகிறேன்” என ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

நம் நாட்டின் ஒரு பகுதியில் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்களே...நூறு நாட்களுக்கு மேலாக ஒரு மாவட்டமே போராட்டம் செய்கிறதே..ஊர் சுற்றுகிறோமே தவுர இதுவரை ஒரு பேட்டி அளித்ததில்லை, மக்களுக்கு என்ன பிரச்னை எனக் கேட்கவில்லை, அறிக்கை அனுப்பவில்லை, ஆறுதல் ட்வீட் கூட போடவில்லை! ஆனால், பெயர் நரேந்திர மோடி, பதவி: இந்தியப் பிரதமர்!

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>