கோடைக்கேற்ற பழம்...பலாப்பழம்!

மா, பலா, வாழை என முக்கனிகளின் ஒன்றானது பலாப்பழம். கோடை காலத்தில் எளிதாகக் கிடைக்கும் இப்பழத்தில் உடலுக்குத் தேவையான பல சத்துகளும் உள்ளன.

மிகப் பெரியதாக இருக்கும் பலாப்பழம், உலகிலேயே மிகப் பெரிய கனி என்று பெயர் பெற்றது. இதில் வரும் இனிப்பு சுவையானது பல பழங்களின் கலவை போன்று இருக்கும். பல சைவ உணவுப் பிரியர்களுக்கு இது மிகப் பெரும் ஆற்றல் தரும் உணவாகவும் இருக்கிறது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

பலாப்பழத்தின் கொட்டையும் சாப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த அனைத்து விஷயங்களும் நூறு சதவிகிதம் உண்மை என்று ஒப்புக் கொள்கிறார் மிகப் பிரபலமான நியூட்ரஷனிஸ்ட் ருஜுதா திவாகர்.

அவர் பலாப்பழம் குறித்து மேலும், `உடலின் புரதச்சத்துக்கு பலாப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பலாப்பழத்தின் ஒவ்வொரு பகுதியும் சாப்பிடுவதற்கு உகந்தது. பலாவின் கொட்டைகளை காய வைத்து வருத்து பொறியல் போல் வைத்து சாப்பிடலாம். அதில் புரதச்சத்து மிக அதிகமாக இருக்கிறது.

வைட்டமின் சி பலாவில் மிகுந்து இருக்கிறது. இதனால் நீரிழிவு நோய்க்கு இதை மருந்தாகவும் எடுத்துக்கொள்ளலாம். உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தியும் பலாவுக்கு அதிகம். நோய் எதிர்ப்பு சக்தி உக்கி வைட்டமின் A மற்றும் C பலாப்பழத்தில் அதிகமாக இருப்பதால், நோய்களில் இருந்து பாதுகாக்கும்” எனக் கூறியுள்ளார்.

More News >>