அழகான பையைக் காப்பாற்ற உயிரை இழக்கவும் தயாரான இளைஞர்!
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் தான் ஆசைப்பட்டு வாங்கிய கைப்பை ஒன்றுக்காக தன் உயிரையும் இழக்கத் தயாராகியிருந்துள்ளார்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜெராட். இவர் தன் அலுவலகப் பணியை முடித்துவிட்டு இருள் சூழந்த மாலை வேளையில் தன் வீட்டுத் தெருவில் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது திடீரென ஜெராடை வழிமறித்த மர்ம ஆசாமி ஒருவர், ஜராட்டிடம் இருந்த கைப்பையை கொடுக்குமாறு மிரட்டியுள்ளார். கொள்யன் ஒருவர் தன்னை மிராட்டுகிறான் என்று அறிந்தும் தன் கைப்பையை தர மறுத்துள்ளார் ஜெராட்.
சற்றும் தாமதிக்காத கொள்ளையன் தன் கைத்துப்பாக்கியை எடுத்து ஜெராடை மிரட்டத் தொடங்கியுள்ளான். துப்பாக்கி முனையில் தன் உயிர் ஊசலாடுவதைக் கூட பொறுட்படுத்தாமல் தன் கைப்பையை விடாமல் தர மறுத்துள்ளார் இளைஞன்.
அதற்குள் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்து அடுத்த சில நிமிடங்களிலேயே அந்தக் கொள்ளையன் கைது செய்யப்பட்டான். கைப்பையை விடாமல் ஏன் ஜெராட் ஓடிக்கொண்டிருந்தார் என்ற கேள்வியை சம்பவ் இடத்துக்கு விரைந்த செய்தியாளர்கள் ஜெராட்டிடமே கேட்ட போது, “என்னுடைய இந்த டிசைனர் கைப்பை நான் ஆசைப்பட்டு வாங்கியது. மிகுந்த வேதனையுடன் கஷ்டப்பட்டு அந்தப் பையை என் சேமிப்புப் பணத்திலிருந்து வாங்கினேன்.
எனக்குப் பிடித்தமான பையை இழக்க ஒரு நாளும் நான் விரும்ப மாட்டேன். அதனால்தான் என் உயிர் போனாலும் பராவாயில்லை என அந்தக் கொள்ளையனிடம் என் பையை தராமல் இருந்தேன்” எனக் கூறியுள்ளார்.
பிடிபட்ட கொள்ளையனிடம் இருந்து அபாயகரமான ஆயுதங்களைக் கைப்பற்றியதாக நகர போலீஸார் அறிக்கை அளித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com