தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடப்படும் என்றும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் தூத்துக்குடியில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஆயரக்கணக்கான பொது மக்கள் போராடி வருகின்றனர். கடந்த 22ம் தேதி நடைபெற்ற பெரிய அளவிலான போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், போலீசாரால் சுடப்பட்டு 13 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடப்படும் என மாவட்ட ஆட்சியராக புதியதாக பொறுப்பேற்றுள்ள சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். ஆலையை முற்றிலுமாக மூடுவதற்கு முன்பு மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலை இயங்குவதற்கான அனுமதியை சுற்றுசூழல் அமைப்பு ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரைவில் மூடப்படும். அதனால், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதி நிலைமை திரும்ப ஒத்துழைக்க வேண்டும் ” என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>