ஹீரேவான இயக்குநர் சுசீந்திரன்
வெண்ணிலாக் கபடிக்குழு என்கிற வெற்றிப் படத்தின் வாயிலாக திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன். அதற்குப் பிறகு நான் மாகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜ பாட்டை, பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களை இயக்கினார். அவர், 'சுட்டுப் பிடிக்க உத்தரவு' என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில், சுசீந்திரனுடன் இணைந்து இயக்குநர் மிஷ்கின், நடிகர் விக்ராந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை ராம்பிரகாஷ் இயக்குகிறார்.