தமிழகத்தில் திமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது

தூத்துக்குடியில், துப்பாக்கிச் சூட்டை கண்டித்து திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது போலீசாரின் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 13 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு, பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து, தமிழகம் முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. தழிகத்தின் பல்வேறு இடங்களிலும் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில், திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேயம் மக்கள் கட்சி, திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>