ஆதார் இருந்தால்தான் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியும்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் செய்ய ஆதார் அட்டை கட்டாயம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம், “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய ஆதார் கட்டாயம்” என்றும், “நேரம் ஒதுக்கீடு செய்து அன்றே சாமி தரிசனம் செய்ய ஆதார் கட்டாயம்” என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், “சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 30 ஆயிரம் டிக்கெட்டுகளும், திங்கள், செவ்வாய் கிழமைகளில் 20 ஆயிரம் டிக்கெட்டுகளும், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் 17 ஆயிரம் டிக்கெட்டுகளும் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், “இலவச தரிசனத்திற்காக நள்ளிரவு 12 மணி முதல் டிக்கெட்டுகள் வழங்கப்படும்” எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>