நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி: பாஜக வெளிநடப்பு
கர்நாடக சட்டமன்றத்தில் 117 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் முதல்வர் குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார். இதையடுத்து, பாஜக வெளிநடப்பு செய்தது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்ணை கிடைக்காத நிலையில், பாஜக ஆட்சியமைத்தது. மாநில முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைதொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணியில் கர்நாடக மாநில ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து, விதான் சவுதாவில் மஜத தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் பதவியேற்றார்.
இந்நிலையில், முதல்வர் குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில், 117 எம்எல்ஏக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் குமாராமிக்கு ஆதரவளித்தனர். இதனால், நம்பிக்கை தீர்மானத்தில் குமாரசாமி வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதற்கிடையே, பாஜகவினர் சட்டமன்றத்தைவிட்டு வெளிநடப்பு செய்தனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com