டயானாவை பின்பற்றுகிறாரா புது இளவரசி மேகன்..?

பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கெல்லுக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது. உலகமே கண்டுவியந்த கோலாகலத் திருவிழாவாக இத்திருமணம் பிரிட்டனின் செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெற்றது.

மேகன் மார்க்கெல் குறித்து பல எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் தன் நடவடிக்கையால் இளவரசி டயானாவையே மேகன் நினைவுபடுத்துவதாகப் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். உதாரணமாக, பிரிட்டன் அரச குடும்ப வழக்கப்படி வெளியாட்களைக் கட்டித்தழுவுவது இல்லை அதற்கு அனுமதியும் கிடையாது. ஆனால், அரண்மனை வாயில் காவலர்கள் முதல் அரண்மனையில் உள்ள பணியாளர்கள் வரை அனைவரையும் கட்டித்தழுவி வாழ்த்துவார் மேகன்.

அது முற்றிலும் மறைந்த இளவரசி டயானாவின் குணமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், பிரிட்டன் அரச குடும்ப வழக்கத்தை எல்லாம் முதன்முதலில் உடைத்துத் தள்ளியவர் டயானா. யார், எவர், எப்படிப்பட்டவர் என எதுவும் பார்க்காமல் தொழு நோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள் முதற்கொண்டு அனைவரையும் கட்டித்தழுவுவார் டயானா.

இதேபோல், அரச குடும்ப வழக்கங்களை எல்லாம் மீறி பத்திரிகைகளில் வெளிப்படையாகப் பேட்டியளிப்பது, மக்களைச் சந்திப்பது, தனக்கான ஒரு ஸ்டைல் என சுதந்திரமாகத் தனக்கென ஒரு பாதையை வகுத்து அரச குடும்பம் என இல்லாமல் தனக்குப் பிடித்ததை தனக்குப் பிடித்தவாறே டயானா செய்வார்.

அதுபோலவே, மேகன் மேர்க்கெல் கூட தனக்கான நியதியை அரச குடும்ப உறுப்பினர் என விட்டுக்கொடுக்காமல் தனக்குத்தானே வகுத்துக்கொண்டுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>