சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது.

சிபிஎஸ்இ பாடப்பிரிவில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் மொத்தம் 11.85 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். இதற்காக, இந்தியா முழுவதும் 4138 மையங்கள் அமைக்கப்பட்டன.

இதற்கிடையே, எக்கனாமிக்ஸ் பாடத்திற்கான கேள்வித்தாள் தேர்வுக்கு முன்பே வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், எக்கனாமிக்ஸ் பாடத்திற்கு மட்டும் மறு தேர்வு வைக்கப்பட்டது.

இந்நிலையில், ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை (மே 26) வெளியாகும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ள www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

இதேபோல், சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>