அஞ்சலி நடிப்பில் இந்தியாவின் முதல் 3டி பேய் படம்- லிசா!

நடிகை அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ‘லிசா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்டிரியோஸ்கோபிக் முறையில் 3டி வடிவில் திகில் படமாக வெளிவர உள்ளது ‘லிசா’. இத்திரைப்படத்தில் லிசாவாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார். ’பி ஜி மீடியா வொர்க்’ இப்படத்தை தயாரித்து வழங்குகிரது.

இத்திரைப்படத்தை இயக்குநர் ராஜு விஸ்வநாத் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையில், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவில் இத்திரைப்படம் தயாராகி வருகிறது. இன்று மாலை 6மணி அளவில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் தான் இந்தியாவிலேயே முதன் முறையாக ஹீலியம் 8கே காமிராவில் படமெடுத்து உள்ளார்களாம். இத்திரைப்படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லிசா வெளியானால் இந்திய அளவில் தொழில்நுட்ப திரைப்படங்களின் வரிசையில் ஒரு முன் மாதிரித் திரைப்படமாக அமையும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>