கடந்த மே 6-ம் தேதி ஃப்ரீமாண்ட் போல்வேர்ட்டில் மாலை 4 மணியளவில் அடையாளம் தெரியாத ஒரு நபர், பெண்ணெருவர் அணிந்திருந்த தங்க நெக்லஸை பறிக்க முயன்றுள்ளார். அதை தடுக்க முயன்ற அப்பெண் கீழே விழுந்துள்ளார். திருடன் அப்பெண்ணின் முகத்தில் தாக்கி காயப்படுத்தியுள்ளான்.
இது குறித்து விசாரித்து வந்த காவல்துறையினர், மே 9-ம் தேதி கேஸ் ஸ்டேஷன் ஒன்றில் சந்தேகத்துக்குரிய நபர் பற்றிய ஒளிப்பதிவுகளை கண்டுபிடித்தனர். அந்நபர் மற்றும் தொடர்புடைய வாகனம் பற்றிய விவரங்களும் கிடைத்தன. அதைக் கொண்டு துப்பு துலக்கி, ஓக்லேண்ட் காவல்துறையினர் மே 11-ம் தேதி அந்நபரை கைது செய்தனர்.
அந்நபரின் விவரங்களை காவல்துறையினர் மே 22-ம் தேதி வெளியிட்டுள்ளனர். ஜெரமைன் ஸ்மித் என்ற அந்நபரின் வயது 22 எனவும், பிட்ஸ்பெர்க் நகரைச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ள காவல்துறையினர், இவர் மீது இன்னும் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com