நீட் மதிப்பெண் அடிப்படையில் காலி இடங்களை நிரப்ப வேண்டும்: உச்ச நீதிமன்றம்

தனியார் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புக்கான காலி இடங்களை நீட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் உள்ள காலி இடங்கள் தொடர்பாக உத்தரபிரதேச மாநில தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், இந்து மல்கோத்ரா முன்னிலையில் நேற்ற விசாரணை நடைபெற்றது.

இதில், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் கூறுகையில், “2018-2019ம் கல்வி ஆண்டில், உத்தரபிரதேச மாநிலத்தில் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் 41.95 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன” என கூறப்பட்டது.

தொடர்ந்து, மத்திய அரசு சார்பில் ஆஜராஜ கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் பேசுகையில், “இந்த 41.95 சதவீத காலி இடங்களை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பலாம். பிற மாநிலங்களும் விரும்பினால் இதையே பின்பற்றலாம். ஆனால், வரும் 31ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார்.

இதைதொடர்ந்து, பிங்கி ஆனந்த் கூறிய யோசனையை நீதிபதிகள் ஏற்று உத்தரவிட்டனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>