சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம் செய்யலாம்..

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடத்தில் 3 நாட்களுக்கு இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பா நடைபெற்று வருகிறது. தற்போது, 45 கி.மீ தூரத்துக்கு 2 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேரு பூங்கா, எழும்பூர், சென்ட்ரல் மற்றும் சின்னமலை-டிஎம்எஸ் ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்தார். இதைதொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த இரண்டு புதிய வழித்தட மெட்ரோ ரயில் சேவையை நேற்று தொடங்கி வைத்தார். இந்த புதிய வழித்தடத்தில் பயணிக்க மெட்ரோ ரயில் கட்டணம் ரூ.70ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சென்டிரல் - மீனம்பாக்கம் வரையிலான புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டதை அடுத்து, மூன்று நாட்களுக்கு இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், எந்த ரயில் நிலையத்தில் இருந்தும் ஏறி இறங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>