கனிஷ்க் நகை கடை உரிமையாளர் கைது... நடந்தது என்ன?
14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் பெற்று மோசடி செய்த கனிஷ்க் தங்க நகை நிறுவன நிர்வாக இயக்குனர் புபேஷ்குமார் ஜெயினை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
சென்னை கதீட்ரல் சாலை, வடக்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட இடங்களில் பிரபல கனிஷ்க் தங்க நகை கடை செயல்பட்டு வருகிறது. கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் சென்னையில் தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பூபேஷ்குமார் ஜெயினும், அவரது மனைவி நீடா ஜெயினும் இயக்குனராக உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பாரத ஸ்டேட் வங்கி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது. இதில், கனிஷ்க் தங்க நகை நிறுவனம் போலி ஆவணங்களை காட்டி 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கியதாகவும், இதனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதைதொடர்ந்து, கடந்த மார்ச் 21ம் தேதி அன்று கனிஷ்க் நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, பூபேஷ்குமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பிறகு, ரூ.191 கோடி மதிப்பு சொத்துக்களை முடக்கினர்.பலகட்ட விசாரணைக்கு பிறகு, கனிஷ்க் தங்க நகை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பூபேஷ்குமார் ஜெயினை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com