ஈசிஆரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் நாள் ஒன்றுக்கு 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீடு குழு பரிந்துரை செய்துள்ளது.

சென்னையில் மழை இல்லாததால், கோடைக்காலங்களில் குடிநீர் பிரச்னையை பொது மக்கள் ஆண்டுதோறும் சந்தித்து வருகின்றனர்.

இதனால், சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூர் என்ற இடத்தில் நாள் ஒன்றுக்கு 40 கோடி லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையை அமைக்க சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக கடலோர ஒழுங்காற்று மதிப்பீடு குழுவிடம் சென்னை குடிநீர் வாரியம் விண்ணப்பித்திருந்தது.

இதனை பரிசீலித்த நிபுணர் மதிப்பீட்டு குழு 6 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு மத்திய சுற்றுசூழல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>