சண்டே ஸ்பெஷல்.. சுட சுட மீன் ரோஸ்ட் ரெசிபி
இன்னைக்கு சண்டே அப்போ ஸ்பெஷலா ஏதாவது சமைக்கணும்ல.. மீன் கொண்டு சூப்பரான டிஷ் செய்யலாம்.. மீன் ரோசஸ்ட் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
மீன்அரை கிலோமஞ்சள் தூள் 1 டீஸ்பூன்மிளகுத் தூள் 2 டீஸ்பூன்தனியா தூள் 2 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய் தேவைக்கேற்பஉப்பு தேவைக்கேற்பஎலுமிச்சைச் சாறு 1 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்முட்டை 3
செய்முறை:
மீனை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். சுத்தம் செய்த பின் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தனியா தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதில் முட்டை அடித்து ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளை கலவையில் போட்டு எடுத்து பின் எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும். சுவையான மீன் ரோஸ்ட் ரெடி..!
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com