வீட்டில் கழிவறை இல்லையா.. அப்போ சம்பளம் கட்..

வீட்டில் கழிவறை இல்லாத அரசு ஊழியர்களுக்கு வரும் மாதம் சம்பளம் வழங்கப்படாது என உத்தரப்பிரதேசத்தின் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கழிவறைகள் கட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்துவதை மக்கள் குறைத்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்ட ஆட்சியர் சீதல் வர்மா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் வீட்டில் இருக்கும் கழிவறையை புகைப்படும் எடுத்தும், கழிப்வறை கட்டியதற்கான அடையாள சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி புகைப்படம் எடுக்காமலும், கழிவறை கட்டியதற்கான அடையாள சான்றை சமர்ப்பிக்கவில்லை என்றாலும் வரும் மே மாதத்திற்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்படும்” என எச்சரித்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>