ஜூன் 10ம் தேதி நாடுதழுவிய போராட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 10ம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்த மஹாராஷ்டிரா விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும்.
உற்பத்தி கொள்முதலுக்கான அதிகபட்ச ஆதரவு விலை என்ன என்பதை அறுவடைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே அறிவிக்க வேண்டும்.
விவசாய விளைபொருள் ஏற்றுமதி கொள்கையை நிர்ணயிக்க வேளாண்துறை ஆராச்சியாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 10 தேதி வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் ஜூன் 10ம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 120க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கொண்ட கிஷன் கிரந்தி ஜன் அந்தோலன் என்னும் அமைப்பு அறிவிப்பு வெளியிட்டதுடன் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அழைப்பும் விடுத்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com