இந்தியாவுக்கு அமெரிக்கா தடை விதிக்குமா?
இந்தியா, ரஷ்யாவிடமிருந்து ஐந்து எஸ்-400 ரக விமான எதிர்ப்பு தளவாடங்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது.
முப்பதாயிரம் கோடி மதிப்பிலான இந்த ஆயுத பேரம், இந்தியாவின் மேல் அமெரிக்கா பொருளாதார தடையை விதிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தன்னுடைய எதிரி நாடுகள் மற்றும் அவற்றுடன் குறிப்பிடத்தக்க வர்த்தகம் செய்யும் நாடுகள் மேல் தடை விதிக்கக்கூடிய காட்ஸா (CAATSA) சட்டத்தை அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம் நடைமுறைப்படுத்தியுள்ளது. தற்போது ஈரான், வடகொரியா மற்றும் ரஷ்யா நாடுகள் மேல் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடன் ஆயுத வர்த்தகம் செய்வதன் மூலம் இந்தியாவுக்கும் அந்தத் தடை விதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு துறை செயலரான மாட்டிஸ், இந்த சட்டத்திலிருந்து சில நட்பு நாடுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ஒரு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தை மேற்கோள் காட்டியுள்ள அமெரிக்க அரசின் செயலர் மைக் போம்பியா, அமெரிக்காவின் வெளியுறவு குழுவின் உறுப்பினரும் செனட்டருமான ராபர்ட் மேனன்டஸிடம், இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். காட்ஸா சட்டத்தின் தீவிர ஆதரவாளரான ராபர்ட் மேனன்டஸ் இது குறித்து எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com