தூத்துக்குடியில் முடக்கப்பட்ட இணைய சேவை மீண்டும் தொடங்கியது
ஸ்டெர்லைட் போராட்டத்தால் தூத்துக்குடியில் முடக்கப்பட்ட இணைய சேவை நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, இணையதளங்களில் தொடர்ந்து வதந்திகள் பரவி மக்களை பீதியடைய வைத்தது. இதனால், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இணைய சேவை முடக்கி உத்தரவிடப்பட்டிருந்தது.
பின்னர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முடக்கி வைக்கப்பட்டிருந்த இணைய சேவை இரண்டு நாட்களுக்கு முன்பு முதல் செயல்பட தொடங்கியது.இருப்பினும், தூத்துக்குடியில் மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாததால், இணையச் சேவைக்கான தடை நீக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதை அடுத்து, 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் முடக்கி வைக்கப்பட்டிருந்த இணைய சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com